Friday 19th of April 2024 12:57:36 PM GMT

LANGUAGE - TAMIL
தற்போது மக்களை காப்பதே அவசியம்
தற்போது மக்களை காப்பதே அவசியம்: அக்தருக்கு கபில்தேவ் பதிலடி!

தற்போது மக்களை காப்பதே அவசியம்: அக்தருக்கு கபில்தேவ் பதிலடி!


இந்தியா-பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையே போட்டியை நடத்தி நிதி திரட்டலாம் என கருத்துத் தெரிவித்திருந்த சோயிப் அக்தருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் பதிலடி கொடுத்துள்ளார்.

பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரித்தவாது, கொரோனா பாதிப்பால் உருவாகியுள்ள இந்த கடினமான காலகட்டத்தில், நலநிதி திரட்டுவதற்காக இந்தியா, பாக்கிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

இந்த போட்டிகளின் முடிவு எதுவாக இருந்தாலும் இதனால் இரு நாட்டினருமே கவலைப்படமாட்டார்கள். விராட் கோலி சதம் அடித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பாபர் அசாம் சதம் கண்டால் நீங்கள் உற்சாகமடையுங்கள். களத்தில் எந்த முடிவு கிடைத்தாலும் இரு அணிகளுமே வெ;றியாளர்கள்தான். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை, இரு நாடுகளும் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்று அக்தர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முள்ளாள் தலைவர் கபில்தேவ் கூறியதாவது,

இந்தியாவுக்கு பணம் தேவையில்லை. சோயிப் அக்தர் அவரது கருத்தை தெரிவித்திருக்கலாம். ஆனால் நமக்கு பணம் தேவையில்லை. அது போதுமான அளவு உள்ளது. எங்களை பொறுத்தவரைக்கும் தற்போது அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்சினையை முடிவுக் nhகண்டு வருவதுதான் முக்கியம். தொலைக்காட்சியில் அரசியல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை வீசுவதை பார்த்து வருகிறேன். அதை நிறுத்துவது அவசியம்.

ஏற்கனவே பிசிசிஐ 51 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. தேவை அதிகரித்தால் இன்னும் அதிகமாக வழங்கும். இது நிதியைப் பெருக்குவதற்கான நிலை அல்ல. நிலமை தற்போது நல்ல நிலமைக்கு திரும்ப வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து வீரர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் நிலைக்கு ஆளாகக்கூடாது.

நிலமை சரியான பின்னர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும். நாட்டை விட கிரிக்கெட் மிகப்பெரியது அல்ல. ஏழை மக்கள், மருத்துவமனை ஊழியர்கள், கவல்துறை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மக்கள்தான் இந்த போரில் முன்னிலை வகிக்கிறார்கள் என கபில்தேவ் மேலும் தெரித்திருந்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE