Thursday 18th of April 2024 11:12:14 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
பிரான்ஸில் நேற்று 987 போ் பலி;  தீவிர நோயாளா் தொகை வீழ்ச்சி!

பிரான்ஸில் நேற்று 987 போ் பலி; தீவிர நோயாளா் தொகை வீழ்ச்சி!


பிரான்ஸில் நேற்று வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 987 போ் உயிரிழந்தனா்.

இருப்பினும் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று குறைந்து பதிவானது.

மருத்துவமனைகளில் நேற்று 554 போ் இறந்துள்ளதுடன், பராமரிப்பு மையங்களில் 433 உயிரிழப்புக்கள் நேற்று பதிவாகியுள்ளன.

இவற்றுடன் பிரான்ஸில் கொரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 13,197 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு தலைமை சுகாதார அதிகாரி ஜெரோம் சொலமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று 10 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை ஒன்றும் பிரான்ஸில் இறந்தது. ஆனால் குழந்தையின் மரணத்துக்கு வேறு காரணங்களும் இருப்பதாக ஜெரோம் சொலமன் கூறினார்.

இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் 62 போ் இருப்பதாகத் தெரிவித்த அவா், தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளா்களின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக நேற்றும் குறைந்துள்ளதாகக் கூறினார்.

தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் பிரான்ஸில் கடந்த மார்ச் மார்ச் 17 முதல் சமூக முடக்கல் உத்தரவு அமுலில் உள்ளது. அத்தியாவசிய பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன,

இந்நிலையில் வீட்டுச் சிறைவாசத்தின் முடிவுக்கான வழி தெரிய ஆரம்பிக்கிறது. தொற்று நோய்களில் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது என சொலமன் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கொரோனா நெருக்கடியின் பின்னா் திங்களன்று மூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். தற்போதுள்ள சமூக முடக்கல் அறிவிப்பு எதிர்வரும் 15-ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அதனை மேலும் நீடிக்கும் அறிவிப்பை அவா் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது உரையைத் தயாரிக்க தொழில்துறை சார்ந்தோர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை வீடியோ மாநாட்டை ஜனாதிபதி நடத்தினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE