Wednesday 24th of April 2024 06:57:33 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா பாதிப்பு
பிரான்ஸில் இறப்பு, தீவிர சிகிச்சை  பிரிவு நோயாளா்களின் தொகையில் வீழ்ச்சி!

பிரான்ஸில் இறப்பு, தீவிர சிகிச்சை பிரிவு நோயாளா்களின் தொகையில் வீழ்ச்சி!


பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவா்களின் இறப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

நேற்று 310 உயிரிழப்புக்களை பிரான்ஸ் பதிவு செய்துள்ளது. இத்துடன் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் இறந்தவா்களில் மொத்த எண்ணிக்கை 14,393 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக நான்காவது நாளாக நேற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இப்போது மொத்தம் 6,845 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

நல்ல அறிகுறிகள் தென்படுகின்றபோதும் நிலைமை இன்றும் தீவிரமாக இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE