Thursday 18th of April 2024 06:57:54 PM GMT

LANGUAGE - TAMIL
பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள்
கஞ்சா கடத்திய மூவர் யாழ்.சிறையில் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கஞ்சா கடத்திய மூவர் யாழ்.சிறையில் தனிமைப்படுத்தப்பட்டனர்!


யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு அண்மித்த கடற்பரப்பில் 133 கிலோ கஞ்சா போதைப்பொருளை டிங்கி படகு ஒன்றில் கடந்திவந்த போது கைது செய்யப்பட்ட பருத்தித்துறையைச் சேர்ந்த நபர்கள் மூவரும் யாழ்.சிறைச்சாலையில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்தத்தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த நபர்கள் 22, 26 மற்றும் 37 வயதுடையவர் என்றும் . இந்த கஞ்சா கடலில் ஒரு வெளிநாட்டுக் கப்பலில் இருந்து சந்தேகத்திற்கிடமான டிங்கிக்கு மாற்றப்பட்டது.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என்றும் கடற்படையினர் அறிவித்திருந்தனர்.

இதேவேளை குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்,

அவர்களில் இருவர் நடுக்கடலில் தரித்திருக்க ஒருவர் இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து கஞ்சா பொதிகளை எடுத்துவந்திருந்ததாக தெரியவந்ததாக எமக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் யாழ்.சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட மூவரும் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

பதின்நான்கு நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் வைத்திருக்கப்படுவர் என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE