;

Friday 5th of June 2020 02:10:01 AM GMT

LANGUAGE - TAMIL
பூமிகா!
வில்லியாக புதிய அவதாரமெடுக்கும் பூமிகா!

வில்லியாக புதிய அவதாரமெடுக்கும் பூமிகா!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை பூமிகா புதிய படமொன்றில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜயுடன் பத்ரி, சூரியாவுடன் சில்லுன்னு ஒரு காதல், ஸ்ரீகாந்துடன் ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்ற நடிகை பூமிகா 2007 இல் காதல் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த பூமிகா அண்மையில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். தெலுங்கில் ரவிதேஜாவின் ‘சீட்டிமார்’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், புதிய படமொன்றில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பூமிகா. பாலகிருஸ்ணா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்க உள்ளதன் மூலம் திரையுலக பயணத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளார் பூமிகா.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE