;

Friday 29th of May 2020 07:20:55 AM GMT

LANGUAGE - TAMIL
தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் - தினேஷ் கார்த்திக் நம்பிக்கை!

இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் - தினேஷ் கார்த்திக் நம்பிக்கை!


இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும் சகலதுறை ஆட்டக்காரருமான தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் தினேஷ் கார்த்திக்.

இந்நிலையில்தான் ரீ-20 அணிக்கு மீண்டும் திரும்புவேன் என நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் கார்த்திக். அது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில்,

ரீ-20 கிரிக்கெட்டில் எனது ரெக்கார்டு சிறப்பாக உள்ளது. உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது கூட ரீ-20 அணிக்கு என்னால் திரும்ப முடியும் என்று நம்புகிறேன்.

சமீபத்தில் நான் ஆடிய உள்ளுர் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடியுள்ளேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்பமாட்டேன் என்று சந்தேகப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தினேஷ் கார்த்திக் மேலும் கூறியிருந்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE