Tuesday 16th of April 2024 12:53:30 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 21.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 21.04.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 8ம் திகதி, ஷாபான் 26ம் திகதி, 21.4.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி முழுவதும், உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 11:40 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம் • பொது மாத சிவராத்திரி, சிவன் வழிபாடு

மேஷம்

மேஷம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். வரவிருக்கும் ஆபத்து நீங்கும். பேச்சில் நிதானம் தேவை. போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கற்பனைத் துறையை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்: மனக்கட்டுப்பாடு அவசியம் தேவை. எதையும் தீர விசாரித்தால் மட்டுமே நல்ல முடிவு ஏற்படும். பிறரிடம் மன்னிப்பு கேட்கும் நிலை வராதபடி விழிப்புடன் இருப்பது நல்லது. பிரியமானவரிடம் பேசி உற்சாகம் பெறுவீர்கள். நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்.

மிதுனம்

மிதுனம் : தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதை விரும்புவீர்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். தாயின் ஆசி பெறுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும்.

கடகம்

கடகம்: பெற்றவர்களின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டி அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணியிடத்தில் மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். காதல் திருமணம் கைகூடும்.

சிம்மம்

சிம்மம் : பேச்சு, செயலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வெளியூர் பயணத்தால் அலுப்பு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

கன்னி

கன்னி: மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். அரசுபணியில் உள்ளவருக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. வழக்குகளில் சிக்கியிருப்போர் அதிலிருந்து மீளுவார்கள். எதிர்பாராத நிகழ்வுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்

துலாம்: வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. கணவன் மனைவி புரிதலில் சற்று சிரமம் ஏற்படலாம். குடும்பப் பிரச்னைகளை எளிதில் சமாளிப்பீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. ஆன்மிக நம்பிக்கை அதிகமாகும். மற்றவர்களை ஏளனமாக எண்ண வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிகம்: எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும். மனதில் புதுவிதமான மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். நண்பர்களை நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்பு அமையும். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவி செய்வீர்கள். பொழுதுபோக்கில் ஆர்வம் கூடும்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் சிறிய அளவில் சலசலப்பு ஏற்படும். கணவன் மனைவி உறவில் சிறு அளவிலான உரசல் உண்டாகும். பணியிடத்தில் வெற்றி வந்தே தீரும். வாழ்க்கை தித்திப்பாக அமையும். பல நாட்கள் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகள் முடிவு பெறும்.

மகரம்

மகரம்: அரசு பணி கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். யாருக்காகவும் உங்கள் உரிமைகளை வீட்டுக் கொடுக்க மாட்டீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.

கும்பம்

கும்பம்: மனதில் புதிய நம்பிக்கை வளரும். சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகள் பல வகையில் நன்மை தரும். பல நாட்கள் தள்ளிப்போன செயல்கள் நல்லபடியாக முடியும். வருமானம் திருப்திகரமாகும். குலதெய்வ வழிபாடு இனிதே நிறைவேறும்.

மீனம்

மீனம்: உதவி செய்தவர்களை மறக்காமல் அவர்களுக்கு பதில் உதவி செய்யுங்கள். பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. புதிய உத்யோகத்துக்கான முயற்சி பலன் தரும். வயதில் பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE