Thursday 21st of October 2021 11:42:24 AM GMT

LANGUAGE - TAMIL
இயல்புக்கு திரும்புகிறது
ஒரு மாதத்தில் பின் ஜோ்மனியில்  கட்டுப்பாடுகள் மெல்லத்  தளா்வு

ஒரு மாதத்தில் பின் ஜோ்மனியில் கட்டுப்பாடுகள் மெல்லத் தளா்வு


ஜோ்மனியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ள நிலையில் அங்கு ஒரு மாத்திற்குப் பின்னர் நேற்று கட்டுப்பாடுகள் மெல்லத் தளா்த்தப்பட்டுள்ளன.

சில பிராந்தியங்களில் சிறிய கடைகள் ஒரு மாதத்தின் பின்னர் நேற்று திறக்கப்பட்டன.

சுமார் 8,600 சதுர அடி வரையான பரப்பளவைக் கொண்ட சிறிய கடைகள் அங்கு திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

சாஞ்சலா் அங்கேலா மேர்க்கெல் மற்றும் மாநில முதல்வர்கள் முடக்கல்களை தளா்த்தும் அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டனா் எனினும் எச்சரிக்கையுடன் தளா்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 16 மாநிலங்களில் ஒவ்வொன்றும் அங்குள்ள நிலைமைகயுளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் தளா்வுகளை அறிவித்துள்ளன.

எனினும் தலைநகர் பெர்லின் போன்ற சில மாநிலங்களில் முடங்கல்களை தளா்த்த இன்றும் சிறிது காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் மெல்ல-மெல்ல தளா்த்தப்படுவதன் ஊமாக ஜேர்மனியின் பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெறும் என நம்புவதாக கொரோனா வைரஸ் நெருக்கடியைக் சிறப்பாக கையாண்ட தலைவராக உலகின் பாராட்ட்டைப் பெற்ற ஜோ்மனி சாஞ்சலா் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஜெர்மனி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE