;

Wednesday 21st of October 2020 06:49:57 AM GMT

LANGUAGE - TAMIL
இங்கிலாந்து – ஒக்போட் ஆய்வு மையத்தில்
கொரோனா வைரஸ் சோதனை தடுப்பூசி  இருவருக்கு இன்று கொடுக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் சோதனை தடுப்பூசி இருவருக்கு இன்று கொடுக்கப்பட்டது!


ஆய்வக சோதனையில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி மருத்து இன்று முதன்றையாக ஐரோப்பாவில் மனிதா்களுக்குச் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்து – ஒக்போட் ஆய்வு மையத்தில் இந்த பரிசேதனை இடம்பெற்றது.

தன்னார்வலா்கள் இருவருக்கு முதல் சோதனை தடுப்பூசி போடப்பட்டனா். எனினும் இந்த ஆய்வுக்காக சோதனைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மேலும் 800 போ் தேவைப்படுகின்றனா்.

இவா்களில் பாதி பேர் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவார்கள். ஏனைய பாதிப் பேருக்கு கொரோனாவுடன் சம்பந்தமில்லாத மூளைக்காய்ச்சல் கட்டுப்பாட்டுத் தடுப்பூசி போடப்படும்.

இதன் பொருள் பரிசோதனைக்கு முன்வரும் 800 பேரும் தாங்கள் என்ன தடுப்பூசியைப் பெறுகிறோம் என அறியமாட்டா்கள்.

எனினும் இவா்களில் யாருக்கு கொரோனா வைரஸ் சோதனை தடுப்பூசி ஏற்றபட்டது? யாருக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது? என்பதை மருத்துவா்கள் அறிவார்கள். தொடா்ந்து அவா்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

இன்று கொரோனா சோதனை தடுப்பூசி சோதனைக்கு தன்னார்வமாக முன்வந்த இருவரில் ஒருவரான எலிசா கிரனாடோ ஒரு விஞ்ஞானியாவார்.

"நான் ஒரு விஞ்ஞானி, எனவே நான் எங்கு வேண்டுமானாலும் அறிவியல் செயல்முறையை முயற்சிகளை ஆதரிக்க விரும்புகிறேன்." என சோதனைத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டபின் அவா் தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு குழுவினரால் மூன்று மாதங்கள் தொடா் ஆய்வுக்குப் பின்னா் இந்த கொரோனா வைரஸ் சோதனைத் தடுப்பூசி உருவாக்கப்பட்டது. ஜென்னர் ஆய்வு நிறுவனைத்தின் தடுப்பூசி பேராசிரியர் சாரா கில்பர்ட் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

"தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த தடுப்பூசி அதிக அளவு நம்பிக்கையுடன் உள்ளது," என்று அவர் கூறினார்.

இந்தத் தடுப்பூசியை மனிதா்களுக்குச் செலுத்தி அதனைப் பெறுபவா்களிடம் இருந்து தரவுகளைச் சேகரிக்க வேண்டும். இது சரியாகச் செயற்படுகிறதா? என ஆராய வேண்டும். இந்த தடுப்பூசியை பரவலாக மக்களுக்குக் கொடுப்பதற்கு முன்னா் இது கொரோனா வைரஸூகக்கு எதிரான செயற்படுகிறதா ?என்பதைக் கண்டிறிய வேண்டும் எனவும் அவா் தெரிவித்தார்.

இந்தத் தடுப்பூசி 80 வீதம் சரியானதாக இருக்கும் என்று தான் நம்புவதான பேராசிரியர் கில்பர்ட் முன்பு கூறினார். இப்போது அது வெற்றிகரமானதாக அமையும் என முழுமையாக நம்புவதாக அவா் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE