Friday 29th of March 2024 09:20:46 AM GMT

LANGUAGE - TAMIL
பிரோட்-ஆண்டர்சன்
டெஸ்ட் வீரர்களில் அபாயகரமானவர் கிரேம் ஸ்மித்!

டெஸ்ட் வீரர்களில் அபாயகரமானவர் கிரேம் ஸ்மித்!


இங்கிலாந்து முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்த கிரேம் ஸ்மித் டெஸ்ட் வீரர்களில் மிகவும் அபாயகரமான வீரராகத் திகழ்ந்தார் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களாக இன்றும் திகழ்ந்து வரும் ஸ்ருவர்ட் பிரோட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய இருவரும் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை கலங்கடித்து வருபவர்கள்.

ஆனால் அவர்கள் இருவரும் கிரேம் ஸ்மித்துக்கு பந்து வீச சிரமப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து ஸ்ருவர்ட் பிரோட் கூறுகையில், கிரேம் ஸ்மித்தான் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை கண்டுபிடித்தேன். அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து அவருக்கு பந்து வீச ஆசைப்பட்டேன். அவரை டிரைவிங் சொட் அடிக்க நான் முயற்சி செய்திருந்தால், அது மாறுபட்டதாக இருந்திருக்கும். ஆனால் ஓவர் த விக்கெட்டில் இருந்து பந்து வீசியது பலனளிக்கவில்லை. அது நம்பிக்கையற்றதாக போனது என்றார்.

இது குறித்து ஆண்டர்சன் கூறுகையில், இதே பிரச்சினை முதன் முறையாக அவருக்கு எதிராக 2003 இல் விளையாடும் போது எனக்கும் இருந்தது. அந்த நேரத்தில் நான் பந்தை அவுட் ஸ்விங் மட்டுமே செய்வேன். அதாவது வலது கை துடுப்பாட்ட வீரருக்கு ஸ்டம்பில் இருந்து பந்தை வெளியே கொண்டு செல்வேன். அப்போது இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு என்னால் அவுட் ஸ்விங் பந்து வீசத் தெரியாது.

நான் அவருடைய வலிமைக்கு தீனியளித்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனது பந்துகளை லெக் சைடில் எளிதாக விளாசினார். 2003 தொடரில் இரண்டு இரட்டைச் சதம் அடித்தார். அவருக்கு பந்து வீசுவது எளிதான காரியம் அல்ல என்று மேலும் கூறியிருந்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE