Wednesday 20th of January 2021 08:22:09 PM GMT

LANGUAGE - TAMIL
விஜய்சேதுபதி!
ஜோதிகாவுக்கு ஆதரவான செய்தி போலியானது - விஜய்சேதுபதி!

ஜோதிகாவுக்கு ஆதரவான செய்தி போலியானது - விஜய்சேதுபதி!


நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவாக தனது பெயரில் பரப்பப்பட்டு வரும் செய்தி போலியானது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

நடிகை ஜோதிகா திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பேசிய பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதையடுத்து, அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது.

கோவிலுக்கு உண்டியலில் பணம் போடுவது போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள் என்ற ஜோதிகாவின் பேச்சை ஆதரிக்கும் விதமான கருத்து நடிகர் விஜய் சேதுபதியின் பெயரில் பரப்பப்பட்டு வருகிறது.

ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துகள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது என விஜய் சேதுபதி கூறியது போல அவரது ருவிட்டர் பதிவாக இத்தகவல் பரவி வருகிறது.

இதையடுத்து விஜய்சேதுபதி மீதும் எதிர்ப்பு குரல்கள் எழத்தொடங்கியிருந்தது. இந்நிலையில்தான் அந்தக் கருத்து போலியானது என விஜய்சேதுபதி மறுத்துள்ளார். அது போலிச் செய்தி என விஜய்சேதுபதி தனது ருவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE