;

Tuesday 2nd of June 2020 02:52:11 AM GMT

LANGUAGE - TAMIL
துல்கர் சல்மான்
''பிரபாகரன் ” நகைச்சுவைக் காட்சிக்காக  மன்னிப்பு கோரினார் மலையாள இயக்குநா்!

''பிரபாகரன் ” நகைச்சுவைக் காட்சிக்காக மன்னிப்பு கோரினார் மலையாள இயக்குநா்!


பிரபாகரன் என்ற பெயரை இழிவுபடுத்துவது போல வரனே அவஸ்யமுன்ட்என்ற மலையாள திரைப்படத்தில் அமைக்கப்பட்டிருந்த நகைச்சுவைக் காட்சிக்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியான நிலையில் அதற்காக அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான் மன்னிப்பு கோரியுள்ளார்.

துல்கர் சல்மான், சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த பெப்ரவரி மாதம் வெளியான படம் வரனே அவஸ்யமுன்ட். அந்தப் படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியில் நாயை பிரபாகரன் என்று அழைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில் பிரபாரன் என்ற பெயா் தமி்ழ் மக்கள் மத்தியில் மதிப்புக்குரிய பெயா். அந்தப் பெயரை இழிவுபடுத்துவது போல இந்தக் காட்சி அமைந்திருப்பதாக துல்கர் சல்மான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து அந்தக் காட்சிக்கு துல்கர் சல்மான் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ’வரனே அவஸ்யமுன்ட் படத்திலுள்ள பிரபாகரன் நகைச்சுவைக் காட்சி தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று பலரும் என்னுடைய கவனத்துக்கு கொண்டுவந்தனர். இந்த காட்சி உள்நோக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது அல்ல. அந்த நகைச்சுவைக் காட்சி பழைய மலையாளப் படமான பட்டனா பிரவேஷம் படத்தைக் குறிப்பிடும் காட்சி.

இது கேரளாவில் மிகவும் பிரபலமான மீம். பிரபாகரன் என்பது கேரளாவில் மிகவும் இயல்பான பெயர். அதனால், படத்தில் தொடக்கத்தில் போடப்பட்ட அறிவிப்பின்படி, அந்தப் பெயர் உயிருடன் உள்ள யாரையுமோ அல்லது மறைந்த யாரையுமோ குறிப்பிடப்படவில்லை. இந்தப் படத்தைப் பார்க்காமல் பலர் இதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். வெறுப்பை பரப்ப முயற்சிக்கிறார்கள் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

அந்தக் காட்சியால் காயம்பட்ட நல்ல மற்றும் அன்பான தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய படத்தின் மூலமோ என்னுடைய வார்த்தைகளின் மூலமோ யார் குறித்தும் அவதூறு பரப்ப வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. இது தவறான புரிதலின் விளைவு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தப் படத்தில் உருவக் கேலி காட்சி இடம் பெற்றிருந்ததாகவும், பெண் பத்திரிகையாளா் ஒருவரின் புகைப்படத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக சர்ச்சை ஏற்பட்டது. அதற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துல்கர் சல்மான் மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE