Thursday 18th of April 2024 11:17:14 AM GMT

LANGUAGE - TAMIL
01.05.2020
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 01.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 01.05.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 18ம் திகதி, ரம்ஜான் 7ம் திகதி, 1.5.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி காலை 8:53 வரை, அதன்பின் நவமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 8:45 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. சூலம் : மேற்கு

• பரிகாரம் : வெல்லம் • சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம் • பொது: அஷ்டமி, பைரவர் வழிபாடு

மேஷம்

மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா தியானத்தில் மனம் செல்லும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போ ட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிகஅக்கறை காட்டுவார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போனகாரியங்கள் முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில்சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள். எதிர் பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தி யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தி யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இருப்பினும் மதியம் 1.5 மணிக்கு பிறகு விரயத்தில் சந்திரன் இருப்பதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் உற் சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். மாலை முதல் சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் கவன முடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்

மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறி வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE