;

Tuesday 2nd of June 2020 03:06:34 AM GMT

LANGUAGE - TAMIL
அவுஸ்ரேலியா
ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியது அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம்!

ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியது அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம்!


மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஒப்பந்த பட்டியிலை அவுஸ்ரேலிய கிரிக்கெட் கட்டுபாட்டு சபை சீரமைக்கும் வகையில், ஒப்பந்தப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்த தவறுபட்சத்தில் அவர்களை நீக்கி புதிய வீரர்களை ஒப்பந்தப் பட்டியலில் இணைப்பது வழமை.

அவ்வாறு கடந்த பருவகாலத்தில் தமது திறமைகளை நிரூபிக்கத் தவறிய ஆறு வீரர்களை மத்திய ஒப்பந்தப்பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதனட் அடிப்படையில் ஷோன் மார்ச், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹென்ட்ஸ்காம்ப், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், மார்கஸ் ஹரிஸ் ஆகிய ஆறு வீரர்களும் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த திறமையை வெளிப்படுத்தி வரும் மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் காயத்திலிருந்து மீண்டுள்ள சகலதுறை ஆட்டக்கரர் மிட்ஷெல் மார்ஷ் உள்ளிட்ட வீரர்கள் இந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ள வீரர்கள்,

அஷ்டோன் அகர், ஜோ பேர்ன்ஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ஒரேஞ் பிஞ்ச், ஜோஷ் ஹோசில்வூட், டிராவிட் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்ஷெல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், ஜேம்ஸ் பேட்டின்சன், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மெத்யூ வடே, டேவிட் வோர்னர் மற்றும் அடம் ஜம்பா ஆகியோராவார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE