Tuesday 19th of March 2024 06:45:29 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 04.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 04.05.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 21ம் திகதி, ரம்ஜான் 10ம் திகதி, 4.5.2020 திங்கட்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி நள்ளிரவு 12:13 வரை, அதன்பின் திரயோதசி திதி, உத்திரம் நட்சத்திரம் மாலை 4:26 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. சூலம் : கிழக்கு

• பரிகாரம் : தயிர் • சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி • பொது: முகூர்த்த நாள், அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

மேஷம்

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல் வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமைதியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்

கடகம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள் .

சிம்மம்

சிம்மம்: கடந்த இரண்டு நாட் களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை பாராட்டுவார்கள். உற்சாகமான நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடி யாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல், வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சின்ன சின்ன சந்தர்ப் பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நினைத்தது நடக்கும் நாள்.

தனுசு

தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள் .

மகரம்

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சி கள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE