Thursday 18th of April 2024 11:47:08 AM GMT

LANGUAGE - TAMIL
இந்தியன்-2
இந்தியன்-2 கைவிடப்பட்டதா? - லைகா நிறுவனம் விளக்கம்!

இந்தியன்-2 கைவிடப்பட்டதா? - லைகா நிறுவனம் விளக்கம்!


கமலகாசன் நடித்து வெளிவந்திருந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத் தயாரிப்பில் இருந்து லைகா நிறுவனம் விலகியுள்ளதாக வெளிவந்த தகவல்களையடுத்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல், ‌ஷங்கர் இருவரும் திட்டமிட்டனர்.

லைகா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு தொடங்கியது. கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.

பாராளுமன்ற தேர்தலில் கமல் பிரசாரம் காரணமாக இடையில் சிலகாலம் தடை பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 19-ந் தேதி படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நின்றது.

இந்த விபத்து தொடர்பாக கமல்ஹாசனுக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. கடிதம் மூலமாக ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் பரவின.

இதையடுத்து அதுகுறித்து விளக்கமளித்துள்ள லைகா நிறுவனம், இந்தியன் 2 படம் குறித்து பரவும் செய்தி உண்மையல்ல. அது வெறும் வதந்தி. தற்போது 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஊரடங்கு முடிந்த பின் எஞ்சியுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என தெரிவித்துள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE