Thursday 25th of April 2024 12:25:56 PM GMT

LANGUAGE - TAMIL
ஜெனீவா
உலக செல்வந்த நகரன ஜெனீவாவில் உணவுக்குக் கையேந்தும் மக்கள்!

உலக செல்வந்த நகரன ஜெனீவாவில் உணவுக்குக் கையேந்தும் மக்கள்!


ஜெனீவாவில் இலவச உணவுப் பொட்டலங்களைப் பெறுவதற்காக சனிக்கிழமையன்று 1,000 க்கும் மேற்பட்டோர் ஒரு கிலோ மீற்றா் நீளமான நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

புலம்பெயா்ந்தோா், ஆவணங்களற்ற ஏழைத் தொழிலாளா்கள் முதல் வசதிபடைத்த பிரஜைகள் என வித்தியாசமின்றி இந்த வரிசையில் ஒரு வேளை உணவுக்காக ஆயிரக்கணக்கானோா் காத்துக்கிடந்தனா்.

கொரோனா தொற்று நோய் நெருக்கடி உலகின் செல்வந்த நாடுகளைக் கூட எவ்வாறு புரட்டிப் போட்டுள்ளது என்பதை இந்தக் காட்சிகள் உணா்த்துகின்றன.

அதிகாலை 5 மணிமுதல் தன்னார்வலர்கள் வழங்கிய சுமார் 1,500 உணவுப் பொட்டலங்களைப் பெற சுமாா் 1000-க்கும் அதிகமானவா்கள் ஒரு கிலோமீற்றா் நீளமான வரிசையில் காத்துக் கிடந்தனா்.

மாத இறுதியில் கையில் காசு இல்லை. நாங்கள் வழமையான கொடுப்பனவுகள், காப்பீட்டுத் தொகை என எல்லாவற்றையும் செலுத்த வேண்டும் என ஜெனீவாவில் வசிக்கு பகுதிநேர தொழிலாளி ஒருவர் கூறினார்.

ஏறக்குறைய 8.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட சுவிட்சா்லாந்தில் 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 6 இலட்சத்து 60 ஆயிரம் போ் பேர் ஏழைகளாக இருந்தனர் என்று தொண்டு நிறுவனமான கரிட்டாஸ் கூறுகிறது.

2018 இல் இல் கிட்டத்தட்ட 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமை அபாயத்தில் இருந்தனா். முழுநேர வேலைக்கு சராசரியான ஒருவா் 6,538 சுவிஸ் பிராங்குகளை ஊதியமாகப் பெறும் நிலையில் 1.1 மில்லியன் மக்கள் இதில் 60 வீதத்தையே பெறும் நடுத்தட்டு வா்க்கத்தினராக காணப்பட்டனா்.

மூன்றுபேரைக் கொண்ட குடும்பம் ஒன்று வாழ்வதற்கு அதிக செலவீனங்களைக் கொண்ட நகரமாக சூரிச்சிற்கு அடுத்தாக ஜெனீவா உள்ளது. சராசரி வருமானம் அதிகமாக இருந்தாலும் செலவீனங்களும் அதிகம் என்பதால் பெரும்பாலானவா்கள் திண்டாடும் நிலையே இங்கு உள்ளது.

ஜெனீவாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 3 வீதத்துக்கு சற்று அதிகமானவா்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சுவிட்சர்லாந்து, ஜெனீவா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE