Monday 17th of January 2022 10:04:57 PM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 11.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 11.05.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 28ம் திகதி, ரம்ஜான் 17ம் திகதி, 11.5.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 10:58 வரை, அதன்பின் பஞ்சமி திதி, மூலம் நட்சத்திரம் காலை 8:18 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம். நல்ல நேரம் :காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. சூலம் : கிழக்கு

• பரிகாரம் : தயிர் • சந்திராஷ்டமம் : ரோகிணி • பொது: சிவன், விநாயகர் வழிபாடு

மேஷம் மேஷம்: வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் அதிகாரம் மிக்க பதவியில் அமர்வர். மாணவர்களுக்கு கலங்கிப் போயிருந்த மனத்தில் தெளிவு பிறக்கும்.

ரிஷபம் ரிஷபம்: வியாபாரம் செழிக்கும். அயல்நாடு செல்வதற்கான விசா கிடைக்கும். தந்தை வழிச் சொத்துகள் கைக்கு வந்து சேரும். போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

மிதுனம் மிதுனம் : பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபநிகழ்ச்சி சம்பந்தமான முயற்சிகள் வெற்றிப் பாதையை நோக்கி செல்லும்.

கடகம் கடகம்: திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் சிறிய தாமதத்துக்குப் பிறகே கிடைக்கும். சிலருக்கு பணிஉயர்வு கிடைத்து தலைமைப் பதவியில் அமர்வர். சான்றோர்களின் ஆசியை பெறுவீர்கள்.

சிம்மம் சிம்மம் : பணியிடத்தில் புதிதாக சேரும் பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் சற்று கவனக் குறைவான செயல்களை செய்து வருத்தப்படுவர். பெண்களின் நீண்டநாள் ஆசை நிறைவேறும். வியாபாரிகள் துாரமான பயணத்துக்கு திட்டமிடுவர்.

கன்னி கன்னி: திருமணம் தள்ளி போனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். திட்டமிட்டு பணிகளை செய்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும்.

துலாம் துலாம்: பெரிய மனிதர்களின் நட்பால் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவில் கவனம் தேவை. குடும்பத் தேவை அதிகரிக்கும். பணியின் காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் விருச்சிகம்: பணியாளர்களுக்கு மனதில் இருந்த கவலை நீங்கும். பெண்கள் உடன்பிறந்தவரின் துணையுடன் செயற்கரிய செயலை செய்து பாராட்டைப் பெறுவர். கடந்த காலத்தில் உங்களைத் தூற்றியவர்கள் போற்றுவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தவரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு கூடுதல் லாபத்தை ஈட்டுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.

மகரம் மகரம்: பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். பணியிடத்தில் உயரதிகாரிகளின் சொல் கேட்டு நடப்பது பல வகைகளில் நன்மை தரும். வாழ்க்கைத் துணையின் செயல்கள் அனைத்தும் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் விதத்தில் அமையும்.

கும்பம் கும்பம்: வியாபாரிகள் புதிய இடத்துக்கு கடையை மாற்றுவர். பணவரவு சிறப்பாக இருந்தாலும் அதை சேமிப்பதில் சிக்கல் ஏற்படலாம். கலைஞர்கள் தங்களின் அயராத முயற்சியினால் பல சாதனைகளைப் செய்வர். சொத்துக்கள் வாங்குவதில் இருந்த சிக்கல் தீரும்.

மீனம் மீனம்: சகஊழியர்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். பிள்ளைகளின் செயலால் கணவன் மனைவி இடையே இருந்த அனைத்து பிரச்னைகளும் தீரும்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE