Tuesday 16th of April 2024 11:02:13 AM GMT

LANGUAGE - TAMIL
ராம் திரைப்படம்
கொரோனாவால் மோகன்லால்-திரிஷா நடித்த படம் கிடப்பில் போடப்பட்டது!

கொரோனாவால் மோகன்லால்-திரிஷா நடித்த படம் கிடப்பில் போடப்பட்டது!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்ட முடக்க நிலையால் இடைநிறுத்தப்பட்டிருந்த மோகன்லால்-திரிஷா நடித்த ராம் மலையாள திரைப்படத்தை கைவிட்டு புதிய படத்தை இயக்க அதன் இயக்குநர் முடிவெடுத்துள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-திரிஷா நடித்த ராம் திரைப்படத்தின் 50 சதவிகிதமான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு முடிந்த நிலையில் கொரோனா காரணமாக தடைப்பட்டிருந்தது.

தற்போது கேரளாவில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையிலும் ராம் திரைப்படத்தின் எஞசிய காட்சிகளை படமாக்கா முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எடுக்கவேண்டிய எஞ்சிய காட்சிகளில் பெரும்பாலானவை லண்டனிலேயே படமாக்க வேண்டியிருப்பதால் படப்பிடிப்பு முடங்கிப்போயுள்ளது.

இப்போதைக்கு லண்டன் சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பது சிரமம் என்பதால் இடைப்பட்ட காலத்தில் குறைந்த பட்ஜெட் படமொன்றை இயக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த பின்னணியில் மோன்லால்-திரிஷா நடிப்பில் உருவான ராம் திரைப்படத்தை கிடப்பில் போட படக்குழுவினர் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), கேரளா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE