Wednesday 24th of April 2024 08:04:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
பேசும்போது தெறிக்கும் உமிழ் நீர் மூலமாக  காற்றில் பரவும் ஆயிரக்கணக்கான வைரஸ்கள்!

பேசும்போது தெறிக்கும் உமிழ் நீர் மூலமாக காற்றில் பரவும் ஆயிரக்கணக்கான வைரஸ்கள்!


மூடப்பட்ட அறைக்குள் இருந்தவாறு மனிதா்கள் பேசும்போது அவா்களில் வாயிலிருந்து தெறிக்கும் உமிழ்நீ்ா் துளிகளில் இருந்து வெளிப்படும் வைரஸ் சுமாா் 14 நிமிடங்கள் வரை காற்றில் பரவியிருக்கும் என ஆய்வொன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மூடிய அறைக்கு இருந்து கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் பேசினால் அங்குள்ள ஏனையவா்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைவரும் கண்டாயம் முக கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் நிறுவனத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் ஒருவரை “Stay healthy” எனும் சொற்களை 25 வினாடிகளுக்கு மூடப்பட்ட பெட்டி ஒன்றுக்குள் சத்தமாகக் கூறச் செய்தனர்.

அந்தப் பெட்டிக்குள் ஒளிக்கீற்று (லேசர்) செலுத்தியதில் அந்தப் பெட்டிக்குள் எச்சில் துளிகள் இருந்ததைக் காண முடிந்தது.

அந்தத் துளிகள் சராசரியாக 14 நிமிடங்களுக்கு காற்றில் கலந்திருந்ததை அமெரிக்க சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவு தெரிவித்தது.

எச்சிலில் கலந்திருக்கக்கூடிய கிருமியின் அளவைக் கருத்தில் கொண்டு, ஒருவர் மூடப்பட்ட அறையில் ஒரு நிமிடத்துக்கு சத்தமாகப் பேசினால் அவரிடமிருந்து 1,000க்கு மேற்பட்ட கிருமிகள் கலந்த எச்சில் துளிகள் காற்றில் கலந்திருக்கும் என்றும் அவை குறைந்தபட்சம் 8நிமிடங்களுக்கு காற்றில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

“பேசுவோரிடமிருந்து வெளியாகி 14 நிமிடங்களுக்கு மேல் எச்சில் துளிகள் காற்றில் கலந்திருப்பது, மூடப்பட்ட அறைக்குள் பேசுவதன் மூலம் கொரோனா கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் உள்ளது என்பதைக் காட்டுகிறது,” என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேச்சின் முலம் கிருமித்தொற்று பரவலின் அளவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸூம் இவ்வாறு பரவலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பில் ஆய்வு செய்து ஆதாரபூா்வமாக நிரூபிக்கப்பட்டால் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றுக்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE