Wednesday 24th of April 2024 08:38:06 PM GMT

LANGUAGE - TAMIL
தடுப்பூசி
ஒக்போா்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி; விலங்கு சோதனை முயற்சியில் வெற்றி!

ஒக்போா்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி; விலங்கு சோதனை முயற்சியில் வெற்றி!


இங்கிலாந்து - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் சோதனைத் தடுப்பூசியை குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனா்.

குரங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகளின்படி இந்தத் தடுப்பூசி நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளதாக அவா்கள் கூறியுள்ளனா்.

இதையடுத்து மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது. இந்த சோதனைகளின் முடிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரிட்டன் அரசு இதற்காக மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் தாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை குரங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்துள்ளது. அதில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் பாதகமான விளைவுகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவரவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை இந்த தடுப்பூசி தடுக்கக்கூடியதாக அமையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட 6 குரங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் அந்த குரங்குகள் முழுமையாக குணமடைந்தது தெரியவந்துள்ளது. அவற்றுக்கு தடுப்பூசியால் எந்த பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்கப்பட உள்ளது. இந்த முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று லண்டன் கிங் கல்லூரியின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது” என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி துறை பேராசிரியை சாரா கில்பர்ட் கூறினார்.

சோதனைகள் வெற்றி பெற்று விட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பேருக்கு செலுத்தத்தக்க அளவு தடுப்பூசி மருந்தினை உற்பத்தி செய்து விடலாம் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE