;

Monday 25th of May 2020 09:47:34 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா தடுப்பூசி கிடைக்கிறதோ, இல்லையோ அமெரிக்கா இயல்புக்குத் திரும்பும் என்கிறாா் ட்ரம்ப்!

கொரோனா தடுப்பூசி கிடைக்கிறதோ, இல்லையோ அமெரிக்கா இயல்புக்குத் திரும்பும் என்கிறாா் ட்ரம்ப்!


கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் இல்லை என்றாலும், அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்.

எந்த முடிவு வந்தாலும் அமெரிக்கா அனைத்து தொழில்களையும் திறக்கும் எனவும் அவா் உறுதியாக கூறியுள்ளார்.

எனினும் கொரோனா வைரசிற்கான தடுப்பூசியை இந்தாண்டு இறுதிக்குள் கண்டுபிடிப்பதை குறிக்கோளாக வைத்துள்ளதாக அமெரிக்க டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி திட்டத்தை "ஒபரேஷன் வார்ப் ஸ்பீட் " (Operation Warp Speed) என்று அழைத்த அவர் உலகப் போரின் உலகின் முதல் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான இரண்டு முயற்சிகளுடன் ஒப்பிட்டார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் வைத்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி டிரம்ப், 14 முக்கிய ஆராய்ச்சியாளர்களோடு கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

எனினும் தடுப்பூசியை சார்ந்துதான் அனைத்தும் இருக்கிறது என்று மக்கள் நினைக்க வேண்டாம். தடுப்பூசி இருந்தாலும், இல்லையென்றாலும் நாம் திரும்பி இயல்பு நிலைக்கு வருவோம். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள எனவும் அவா்கூறினாா்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE