;

Monday 25th of May 2020 07:41:22 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரேசில் ஜனாதிபதியுடன் கருத்து மோதலையடுத்து ஒரே மாதத்தில் பதவி விலகினாா் சுகாதார அமைச்சா்!

பிரேசில் ஜனாதிபதியுடன் கருத்து மோதலையடுத்து ஒரே மாதத்தில் பதவி விலகினாா் சுகாதார அமைச்சா்!


பிரேசிலில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பதவியேற்று ஒரே மாதத்தில் அந்நாட்டு சுகாதார அமைச்சர் நெல்சன் டைக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா்.

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகரித்துவரும் நிலையில் அந்நாட்டில் ஜிம்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க ஜனாதிபதி ஜெயீர் போல்சீனாரோ உத்தரவு பிறப்பித்ததை, சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

எனினும் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இவருக்கு முன்னாள் இருந்த அமைச்சர் ஜனாதிபதி ஜெயீர் போல்சீனாரோவால் நீக்கப்பட்டார். இதனையடுத்தே நெல்சன் டைக் ஒரு மாதத்துக்கு முன்னா் பதவியேற்றாா்.

கொரோனா தொற்று பரவலை சாதாரண காய்ச்சல் என்று பிரேசில் ஜனாதிபதி போல்சீனாரோ கூறியது ஏற்கனவே அங்கு சர்ச்சை ஏற்படுத்தியது.

பிரேசிலில் தொற்று நோய் தீவிர நெருக்கடியின் மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி போல்சீனாரோ தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இதற்கு கடும் எதிா்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

நாட்டின் பல்வேறு மாகாண ஆளுநா்களும் ஜனாதிபதியின் முடிவுக்குக் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளதுடன், சமூக முடக்கல்களைத் தளா்த்தும் அவரது உத்தரவை செயற்படுத்தப்போவதில்லை என கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE