Tuesday 23rd of April 2024 12:03:50 PM GMT

LANGUAGE - TAMIL
கேரளாவில்
கேரளாவில் கொரோனா 2வது அலை: புதிதாக 52 பேருக்கு தொற்று!

கேரளாவில் கொரோனா 2வது அலை: புதிதாக 52 பேருக்கு தொற்று!


இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் 2வது அலை தாக்கியுள்ளதையடுத்து மிண்டும் அங்கு கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று (மே-16) மேலும் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்ததாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதன் மூலம் கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 561 ஆக அதிகரித்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அந்த 26 பேருடன், சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 64 ஆக உயர்ந்திருந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்த தகவலின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கேரளாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 587 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு புதிய தொற்றாளர்கள் கண்டறியப்படாத சூழலில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன் விளைவாக கொரோனாவில் 2வது அலையின் ஆரம்பமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, கேரளா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE