Wednesday 24th of April 2024 01:59:41 AM GMT

LANGUAGE - TAMIL
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
இறுதிப்போரில் பலியானவர்களை நினைவுகூர்ந்து வல்வையில் விசேட பூசைவழிபாடுகள்!

இறுதிப்போரில் பலியானவர்களை நினைவுகூர்ந்து வல்வையில் விசேட பூசைவழிபாடுகள்!


இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி, வல்வை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திலும், வல்வை பாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அவர்களது ஏற்ப்பாட்டில் குறித்த ஆத்மசாந்தி பூசை இன்று மாலை 06 மணிக்கு இடம்பெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன், இன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை தடுத்த இராணுவம் பொலிஸார் அதற்குப் பல காரணங்களை சொன்னார்கள்,

ஆனால் 2009 ம் ஆண்டு இந்தப் போரை நடத்தியவர் இப்போதைய ஜனாதிபதி கோட்டா. அவர் தனது செயலை மறைக்கவே இவ்வாறான தடைகளை ஏற்படுத்தினர், அவரது உள்ளத்தில் சில பிரச்சினைகள் இருப்பதை உணர்கின்றேன், இன்றளவும் இறந்தவர்களை நினைவுகூர தடை என்றால் எம்மீது அவர்களுக்கு இருக்கும் வெறுப்பை உணரமுடிகிறது. என்று கருத்து தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE