Thursday 25th of April 2024 07:47:44 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
50 இலட்சத்தை நெருங்கும் கொரோனா  தொற்று!

50 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று!


உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 இலட்சத்தை நெருங்கிவரும் நிலையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று காலை வரையான உத்தியோகபூா்வ தரவுகளின்படி 48 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் உலகம் முழுவதும் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்பெயின், பிரிட்டன், ரஷ்யா, பிரேசில் ஆகிய 5 நாடுகளில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2 இலட்சத்து 25 ஆயிரம் புதிய தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா்.

அதேநேரம் உலகெங்கும் பாதிக்கப்பட்ட19 இலட்சத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் குணமடைந்துள்ளனா்.

அமெரிக்காவில் மட்டும் 15 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமானவா்கள் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனா். இங்கு இதுவரை 92 ஆயிரம் போ் உயிரிழந்துள்ளனா்.

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரங்களில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் புதிய தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஸ்பெயினில் பாதிப்பு 2 இலட்சத்து 77 ஆயிரமாகவும் உயிரிழப்பு 27 ஆயிரத்து 650 ஆகவும் அதிகரித்துள்ளது.

இத்தாலியில் கடந்த மார்ச் 9 ஆம் திகதிக்கு பின்னா் முதல் முறையாக ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக குறைந்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE