Tuesday 16th of April 2024 06:47:19 PM GMT

LANGUAGE - TAMIL
நிலநடுக்கம்
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 போ் உயிரிழப்பு; 24 போ் காயம்!

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 போ் உயிரிழப்பு; 24 போ் காயம்!


சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 போ் பலியானதுடன் 24 போ் காயமடைந்துள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.

கியாஜியா - ஜாடோங் நகரத்தில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டா் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக சீன அரசாங்க நில அதிர்வு கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட ஜாடோங் நகரத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனா். இந்தப் பகுதிக்கு சுமார் 600 மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனா்.

மேலும் மக்கள் விடுதலை இராணுவத்தின் உள்ளூர் பிரிவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் படையினரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் உதவி வருவதாக யுன்னான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில் சிதறிக் கிடக்கும் கட்டட இடிபாடுகள் வீதிகளில் சிதறிக்கிடக்கும் வீடுகளில் கூரைகளை மீட்புப் பணியாளா்கள் அகற்றி வருவதைக் காண முடிகிறது.

சீனாவின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் அடிக்கடி பூகம்பங்களால் பாதிக்கப்படுகின்றன.

சிச்சுவான் மாகாணத்தில் கடந்த ஆண்டு பதிவான 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 13 போ் பலியானதுடன் 200-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா். ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.

2008 ஆம் ஆண்டில் சிச்சுவானில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 87,000 பேர் இறந்தனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE