Friday 4th of December 2020 08:27:26 PM GMT

LANGUAGE - TAMIL
-
நளொன்றுக்கு 6 முறை கைகளைக் கழுவுவதால் கொரோனாவில் இருந்து தப்பும் வாய்ப்பு அதிகம்!

நளொன்றுக்கு 6 முறை கைகளைக் கழுவுவதால் கொரோனாவில் இருந்து தப்பும் வாய்ப்பு அதிகம்!


நாளொன்றுக்கு குறைந்தது 6 முதல் 10 தடவைகள் கைகளை கழுவுவதால் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை ஒத்த வேறு வைரஸ் தொற்றுகளின்2006 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 1,663 பேர் பங்கேற்றனர். எனினும் நாளொன்றுக்கு பத்து முறைக்கும் மேல் கைகளை கழுவுவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான அபாயத்தை மேற்கொண்டு குறைப்பதாக தெரியவில்லை.

பொதுவாக தடிமன் போன்ற லேசான நோயை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தின் ஒரு வகையைச் சோ்ந்ததுதான் கொரோனா வைரஸ். இவ்வாறான வைரஸ்களை சோப்புக்கொண்டு கைகளைக் கழுவுவதன் மூலம் அழிக்க முடியும்.

வெல்கம் ஓபன் ரிசர்ச்சில் என்ற இதழில் ( Wellcome Open Research) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளில் 1663 பங்கேற்பாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு தடவையாவது கைகளைக் கழுவியவா்களிடம் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஒரு நாளைக்கு 10 தடவைகளுக்கு மேல் கைகளைக் கழுவுவது தொற்றுநோய்க்கான அபாயத்தை மேலும் குறைக்கும் வாய்ப்பை அளிப்பதாகத் தெரியவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தொற்று நோயை மட்டும் கருத்தில் கொள்ளாமல் எல்லா நேரங்களிலும் கை சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் டாக்டர் சாரா பீல் கூறினார்.

இது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதுடன், உங்களை அறியாமல் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்கவும் உதவும் எனவும் அவா் தெரிவித்தாா்.

குறைந்தது 20 விநாடிகளுக்கு கை கழுவுதல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும் என இங்கிலாந்து பொது சுகாதார அதிகாரி ஒருவர் கூறினாா்.

பொது இடங்களுக்குச் சென்று திரும்பும்போது கைகளைக் கழுவிக்கொள்வது எப்போதுமே நல்லது எனவும் அவா் தெரிவித்தாா்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE