Thursday 28th of March 2024 06:40:17 AM GMT

LANGUAGE - TAMIL
பாக்கிஸ்தான்
இம்ரான் கானின் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கொரோனாவுக்கு பலி!

இம்ரான் கானின் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கொரோனாவுக்கு பலி!


பாக்கிஸ்தான் பஞ்சாப் மாநில சட்ட சபையில் இம்ரான் கான் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப் இன்சாப் (பிரிஐ) கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் சட்டசபை உறுப்பினரான ஷஹீன் ரஸா (வயது-60) ஏற்கனவே நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அறிகுறி ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து பாகிஸ்தான் லாகூரில் உள்ள மயூ மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

தொடர்ந்து விசேட சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே-20) புதன் கிழமை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவுக்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் இரங்கலை தெரிவத்து வருகின்றனர்.

இதுவரை பாக்கிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 45 ஆயிரத்து 898 ஆக உள்ளதுடன் 985 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உலகளாவிய கொரோனா தொற்று ஏற்பட்ட நாடுகள் வரிசையில் பாக்கிஸ்தான் 19 வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE