Saturday 20th of April 2024 12:46:33 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 21.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 21.05.2020


இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 8ம் தேதி, ரம்ஜான் 27ம் தேதி, 21.5.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி இரவு 10:41 வரை, அதன்பின் அமாவாசை திதி, பரணி நட்சத்திரம் நள்ளிரவு 2:06 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த - மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. சூலம் : தெற்கு

• பரிகாரம் : தைலம் • சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை • பொது: குருவாயூரப்பன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். மற்றவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றி கொள்ள பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தைப் பற்றியகவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர்பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். இனிமையான நாள்.

கடகம்

கடகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத் திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் .புதிய பாதைதெரியும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள். தேவை யற்ற வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோ கத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் தாமதமாகும் நாள்.

துலாம்

துலாம்: பிள்ளைகள் உங்கள் அருமையை புரிந்துகொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதியவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். சொத்து சிக்கலில்ஒன்று தீரும். வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

தனுசு

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிக ரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். புதியவகள் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தி யாயம் தொடங்கும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE