;

Friday 5th of June 2020 04:40:58 AM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவில் இயலாமையாலே இந்நிலை எனச் சாடுகிறாா் அமெரிக்க ஜனாதிபதி!

சீனாவில் இயலாமையாலே இந்நிலை எனச் சாடுகிறாா் அமெரிக்க ஜனாதிபதி!


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்து, 3 இலட்சத்து 29 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் உயிரிழந்துள்ள நிலையில் சீனாவின் இயலாமையாலேயே இந்த உலகப் பெரும் அவலம் நடந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்.

அவா்கள் நினைத்திருந்தால் இந்தத் தொற்றுநோயை ஆரம்பித்திலேயே மிக இலகுவாகக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை எனவும் ட்ரம்ப் சாடியுள்ளாா்.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பேரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 50 இலட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். 3 இலட்சத்து 29 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.

உலகிலேயே மிக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16 இலட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்புக்களும் இன்றுவரை 95 ஆயிரமாகப் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பி விட்டதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

சீனா இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் சீனாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டுவதாகவும், விசாரணை நடத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறி வருகிறார்.

இந்நிலையில் சீனாவின் இயலாமையினால் உலக அளவில் இத்தனை பெரும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என இன்று வெளியிட்டுள்ள ருவிட்டா் பதிவில் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.


Category: உலகம், புதிது
Tags: சீனா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE