;

Thursday 13th of August 2020 02:47:54 PM GMT

LANGUAGE - TAMIL
சிம்பு - திரிஷா
பெரும் வரவேற்பை பெற்றுள்ள கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம்!

பெரும் வரவேற்பை பெற்றுள்ள கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம்!


இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் பெரும் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காதல் படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா இவரின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் பேசப்படுகிறது. அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அதன் ஒரு பகுதியை குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் டயல் செய்த எண் என பெயரிடப்பட்டுள்ள அந்த 12 நிமிட குறும்படத்தை பார்க்கும் போது விண்ணைத்தாண்டி வருவாயா-2 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளார் கவுதம் மேனன். சிம்பு - திரிஷா இடையே நடக்கும் செல்போன் உரையாடல்களை "கொஞ்சம் விழிப்புணர்வு... நிறைய காதலுடன்" கொடுத்துள்ளார் கவுதம் மேனன்.

குறிப்பாக இந்த குறும்படத்தின் வசனங்கள் மனமுருக வைக்கின்றன. சிம்பு கூட இந்த வசனங்களை படித்துவிட்டு கண்கலங்கியதாக சொல்லப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை இதற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. பார்க்க பார்க்க ரசித்துக்கொண்டே இருக்கும்படிஇ குறும்படத்தை அழகாக உருவாக்கியுள்ளார் கவுதம் மேனன்.

இக்குநர் கவுதம் மேனன் தனது ருவிட்டர் பக்கத்தில் நேற்று (மே-20) இரவு 10.35 மணிக்கு பதிவேற்றிய இக் குறும்படம் இதுவரை 8 .லட்சத்து 93 ஆயிரம் கடந்த பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு 9 இலட்சத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE