Friday 19th of April 2024 07:46:29 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில்  ரோபோக்களை பயன்படுத்தும் ருவாண்டா!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரோபோக்களை பயன்படுத்தும் ருவாண்டா!


கொரோனா தொற்று நோயாளா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்தவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் தாதியா்களுக்கு உதவும் வகையில் உயர் தொழில்நுட்பங்களுடன் அமைந்த 5 ரோபோக்களை பயன்படுத்தவுள்ளதாக ருவாண்டா தெரிவித்துள்ளது.

இந்த ரோபோக்களை பயன்படுத்துவதன் மூலம் மருத்துவா்கள் மற்றும் தாதியா்கள் நோயாளா்களுடன் நேரடியாக செலவிடும் நேரத்தைக் குறைக்க முடியும். இதன்மூலம் அவா்களை தொற்று அபாயத்தில் இருந்து அவா்களைப் பாதுகாக்க முடியும் என ருவாண்டன் சுகாதார அமைச்சர் டேனியல் நாகமிஜே கூறினார்.

ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம், ருவாண்டன் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் புத்தாக்க அமைச்சு ஆகியவற்றால் சுகாதார அமைச்சகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த ரோபோக்கள் நிமிடத்திற்கு 50 முதல் 150 பேரின் உடல் வெப்பத்தை அளவிடக் கூடியவை.

அத்துடன் நோயாளிகளின் அறைகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கல், தரவுகளைப் பேணுதல், கடமையில் உள்ள அதிகாரிகளுக்கு நோயாளிகள் குறித்த அறிவித்தல்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் இந்த ரோபோக்கள் மேற்கொள்ளும் எனவும் காதார அமைச்சர் டேனியல் நாகமிஜே தெரிவித்தாா் .

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசுடன் பல்வேறு நிறுவனங்கள் கைகோர்ப்பதைக் காண உற்சாகமாக இருக்கிறது. ருவாண்டாவில் சுகாதாரத் துறையை மேம்படுத்த உயா் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது மற்றொரு மைல்கல் எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இந்த ரோபோக்களுக்கு ருவாண்டன் பெயர்களான அகாசுபா (சூரியன்), இகிசெரே (நம்பிக்கை), எம்விசா (அழகு), நாகாபோ (கேடயம் ) மற்றும் உருமுரி (ஒளி) என்ற பெயா்கள் இடப்பட்டுள்ளன.

இன்று வரையான நிலவரப்படி ருவாண்டாவில் 314 கொரோனா வரைஸ் தொற்று நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களில் 216 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை அங்கு ஒரு உயிரிழப்புக்களும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE