Tuesday 16th of April 2024 12:06:05 PM GMT

LANGUAGE - TAMIL
--
முகமாலையில் எலும்புக் கூட்டு எச்சங்களுடன் காணப்படுபவை போராளிகளின் சீருடைகள்?!

முகமாலையில் எலும்புக் கூட்டு எச்சங்களுடன் காணப்படுபவை போராளிகளின் சீருடைகள்?!


கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலையில் இன்று முற்பகல் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்களுடன் காணப்படுபவை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் அணியும் சீருடைகள் என்று தெரியவந்துள்ளது.

முற்பகல் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் குறித்த எலும்புக்கூட்டு எச்சங்களை கண்ணுற்றிருக்கின்றனர்.

அது தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் பிந்திய தகவல்களின் அடிப்படையில் அங்கு காணப்படுகின்ற எலும்புக்கூட்டு எச்சங்களுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் அணிகின்ற சீருடைகள் காணப்படுகின்ற அதேவேளை சிதைவடைந்த நிலையில் துப்பாக்கி ஒன்றும் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

போர் தீவிரம் பெற்ற வேளையில் குறித்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE