Thursday 28th of March 2024 08:53:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழகத்தில்  நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம்; ஓட்டுநர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம்; ஓட்டுநர்கள் மகிழ்ச்சி!


தமிழக அரசு நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம் என்று அறிவித்ததை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களது ஆட்டோக்களை சோப்புப் போட்டு கழுவ தூய்மை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவை சில தளர்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதன்படி இன்று ஆட்டோக்கள் இயங்கலாம் என்றும் ஒரு பயணிகளோடு நான் ஆட்டோ இயங்க வேண்டும் என்றும் விதிமுறை விதித்து ஆட்டோக்கள் இயங்கு வதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 2 மாதகாலமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அரசின் இந்த உத்தரவினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நாளைமுதல் தங்களுடைய தொழிலுக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர். ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்டில் தங்களது ஆட்டோக்களை எடுத்து வந்து அங்கு சோப்பு தண்ணீர் ஆகியவற்றோடு கலந்து தங்களது ஆட்டோக்களை தூய்மை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆட்டோக்கள் இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

* சென்னை மாநகர காவல் எல்லை தவிர பிற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி/கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.

* காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே ஆட்டோக்கள் இயங்க அனுமதி.

* ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு மட்டுமே ஆட்டோவில் அனுமதி


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE