Saturday 20th of April 2024 06:19:22 AM GMT

LANGUAGE - TAMIL
ஜஸ்மின் சூக்கா
போக்குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு பதவிஉயா்வு; கடுமையாகச் சாடுகிறாார் ஜஸ்மின் சூக்கா

போக்குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு பதவிஉயா்வு; கடுமையாகச் சாடுகிறாார் ஜஸ்மின் சூக்கா


இலங்கையில் போர் முடிவடைந்து 11 ஆண்டுநிறைவில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வேண்டுமென்றே அதிகாரிகளுக்கு'மேஜர்ஜெனரல் பதவியுயர்வு வழங்கியுள்ளார். . பாதுகாப்புதுறைச் சீர்திருத்தத்திற்கான ஐ.நாவின் தீர்மானம் 2011இன் கீழ் இலங்கையின் உறுதிப்பாடுகளுக்கு இணங்க உத்தியோகபூர்வமான பதவிகள் வழங்கப்பட முன்னர் இந்த அதிகாரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

"இந்த தனி நபர்களின் தெரியலானது அரசியலை அடிப்படையாக கொண்டதொன்று. இது இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் என்பது கூட நிகழ்ச்சி நிரலில் இல்லை என்ற செய்தியை மீண்டும்அனுப்புகின்றது.

இது பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் இன்னுமொரு செயலாகவும் தண்டனையிலிருந்து துணிவாக பாதுகாப்பு வழங்கும் செயலாகவும் உள்ளது" என ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளர்.

இலங்கையின்ஒரு இராஜதந்திரியாக இருந்தவேளையில் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறியதாக நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத போதும் இங்கிலாந்து நீதிமன்றத்தினால் குற்றங்காணப்பட்ட பிரியங்க பெர்ணாண்டோவின் பதவியுயர்வானது மிகவும் முக்கியமானதாகும். இவர் 2018 இல் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கழுத்தை அறுக்கும்சைகையினைக் காட்டி அச்சுறுத்தல்மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றச் செயல்கள் புரிந்தபோதும் இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றதில் இருந்து இவருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஒரு மாவீரனாகவும் அழைக்கப்பட்டார்.

"நீங்கள் உலகம் முழுவதும் சென்று நாடு கடந்து வாழும் தமிழர்களை இழிவுபடுத்தி அச்சுறுத்தினால் உங்களுக்கு பரிசு வழங்கப்படும்என்பதே இராணுவ அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளுக்கான செய்தியாகும்"எனசூக்கா தெரிவித்தார்.

"இது நீதி முறையை அவமதிக்கும் ஒருமோசமான நடவடிக்கையுமாகும்”.விசேட அதிரடிப்படைகளின் முன்னாள் தளபதியான கரேந்திர பராக்கிர மரணசிங்கவின் பதவியுயர்வானது பொறுப்புக் கூறலுக்கு விழுந்த இன்னுமொரு பாரிய அடியாகும்.

மே2009 இல் இசைப்பிரியா என்று அறியப்பட்ட தமிழ் தொலைக்காட்சியின் பெண் தயாரிப்பாளர் இராணுவத்தினரிடம் சரணடைவது பற்றிய வீடியோக்களில் ஒன்றில் இவர் அடையாளங் காணப்பட்டுள்ளார். இந்தப் பெண் தயாரிப்பாளர் சிறிது நேரத்தின் பின்னர் இராணுவத்தின்பிடியில் இருந்த வேளையில் கொலைசெய்யப்பட்டதாக ஐ.நாவிசாரணை ஒன்று கண்டுபிடித்தது. இசைப்பிரியாவுடன்தெளிவாக வீடியோவில் காணப்பட்டபோதும் என்ன நடந்தது என்பதுபற்றி ரணசிங்க இன்று வரை விசாரிக்கப்படவில்லை.

இசைப்பிரியாவின்அரை நிர்வாண உடல் வெற்றிப் புகைப்படங்களில் காணப்பட்டது."தமது மகளுடைய கொலைக்கான முக்கியசாட்சி ஒருவர் மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு வழங்கப்படுவதைப்பார்க்கும் போது நாடுகடந்து வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள இசைப்பிரியாவின் உயிர்தப்பியுள்ள குடும்பத்தினருக்கு எப்படி இருக்கும் என யாராவது கேட்கவேண்டும்" என சூக்கா தெரிவித்தார்.

சன்னாடி வீரசூரியா யாழ்ப்பாணத்தில் 512 ஆவது படையணியின் தளபதியாக இருந்தார். அந்தக் காலப்பகுதில் அந்தப் படையணியும் வேறு படையணிகளும் தமிழ் சந்தேகநபர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்ததில் தொடர்புபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது .

கோவிட்19 குறித்த பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் இருந்த போதும் ஆயுதப்படையினரை உள்ளடக்கி இந்த வாரம் கொழும்பில் ஒரு போர் ஞாபகாா்த்த நிகழ்வு ஒன்றினை நடாத்துவதற்கு அனுமதிவழங்கப்பட்டது.

ஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வு வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினரால் வைரஸ் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டது.

"பொதுச்சமூக மட்டத்தில் இராணுவச் செல்வாக்கு சாதாரணமாக்கப்படுவதையே நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என சூக்கா தெரிவித்தார்.

தண்டனையிலிருந்து பாதுகாப்பு மேலும் வலுப்பெறும்வகையில் முறையற்ற வலையமைப்புக்கள் ஜனாதிபதி ராஜபக்சவின் கீழ் உத்தியோகபூர்வமானவையாக மாற்றப்பட்டுவருகின்றன எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE