Thursday 28th of March 2024 10:32:51 AM GMT

LANGUAGE - TAMIL
இந்தியாவில்
பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை உண்ணும் அவலம்: இந்தியாவில் வறுமை கோரத்தாண்டவம்!

பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை உண்ணும் அவலம்: இந்தியாவில் வறுமை கோரத்தாண்டவம்!


கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வருமானமின்றி வெளி மாநிலங்களில் தவித்து வரும் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் கால்நடையாக சொந்த ஊர் திரும்பும் வழியில் பசி கொடுமையால் வீதி விபத்தில் உறந்து கிடந்த நாயின் உடலை பித்து சாப்பிடும் அவலம் குறித்த காணொளி வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்காட்சியானது இந்தியாவில் வறுமை கோரத்தாண்டவம் ஆடுவதை வெளிப்படுத்தியுள்ளமை பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவியதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சொந்த ஊர்திரும்ப முடியாது தவித்துவந்தவர்கள் நடந்தும் ஆபத்தான் வழிமுறைகளிலும் தத்தமது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இவ்வாறு சொந்த ஊர்திரும்பும் வழியில் ஏற்படும் விபத்துகளிலும், உடல்நலக்குறைவாலும், பசிக் கொடுமையாலும் பலர் உயிரிழந்து வருகின்றமை புலம்பெயர் தொழிலாளர்களது அவலமான பக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில்தான், டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் உடலை பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதுதொடர்பாக, ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18-ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அப்போது, சாஹபுரா பகுதியில் சாலையில் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை காண்கிறார். அவரருகே சென்ற பிரதுமன் சிங் நருகா, “உங்களுக்கு சாப்பிட உணவு இல்லையா? நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என அந்த மனிதரைக் கூச்சலிட்டு, சாலையின் ஓரத்தில் காத்திருக்கச் சொல்கிறார். அதன்பின் அவரை அணுகிய நருகா, அவருக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்குகிறார்.

இந்த வீடியோவை கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து முகநூலில் நருகா வெளியிட்டுள்ள செய்தியில், பசியால் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை சாலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். யாரும் அவருக்கு உதவ வாகனங்களை நிறுத்தவில்லை என்பது கவலை அளிக்கிறது. உடனடியாக நான் அவருக்கு உணவும், நீரும் வழங்கினேன். தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள். இந்த வீடியோவை உங்களால் முடிந்தவரை அரசுக்குச் சென்றடையும் வரை பகிர்ந்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE