Thursday 28th of March 2024 06:04:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஹொங்கொங்கில் தனது அதிகாரத்தை வலுப்படுத்த திட்டமிடும் சீனா!

ஹொங்கொங்கில் தனது அதிகாரத்தை வலுப்படுத்த திட்டமிடும் சீனா!


ஹொங்கொங்கில் தன்னாட்சி உரிமைப் போராட்டங்கள் வலுவடைந்துவரும் நிலையில் அங்கு தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹொங்கொங் சட்ட மற்றும் ஆட்சிமைப்பில் மாற்றங்கள் செய்வற்கான இந்தச் சட்டத்திருத்தம் சீனா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த புதிய சட்டத்திருத்த யோசனையில் பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாட்டுத் தலையீடுகள், ஹொங்கொங்கில் பயங்கரவாத செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் அந்தச் சட்டமூலத்தில் இடம் பெற்றுள்ளன.

ஜனநாயகத்துக்கு ஆதரவாக ஹொங்கொங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. எனினும், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் சீனாவுக்கு ஆதரவான ஹொங்கொங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் அந்த நகரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்தன.

இந்தப் போராட்டத்தின்போது வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டத்திருத்த யோசனைக்கு எதிராகத் தொடங்கிய இந்த ஆா்ப்பாட்டங்கள், சீன ஆளுகைக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது.

இந்தச் சூழலில் கடும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஹொங்கொங்கிலிருந்து குற்றவாளிகளை நாடு கடத்த வகை செய்யும் சட்டத்திருத்த யோசனையை இனியும் நிறைவேற்ற முடியாது என்பதை சீனா உணா்ந்துள்ளாகக் கூறப்படுகிறது.

அதன் விளைவாகவே ஹொங்கொங்கில் தங்களது அதிகாரத்தை அதிகரிக்கும் வகையிலான தேசிய பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை சீன அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதற்கு ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இந்தச் சட்டத்திருத்த யோசனை நிறைவேற்றப்பட்டால் ஹொங்கொங்கின் சுயாட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று அவா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

சீனாவின் குவிங் அரசுடன் பிரிட்டன் கடந்த 1998-ஆம் ஆண்டு மேற்கொண்ட 99 ஆண்டு குத்தகை ஒப்பத்தின் கீழ் ஹொங்கொங் நகரம் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் அந்த ஒப்பந்த காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து ஹொங்கொங்கை சீன அரசிடம் பிரிட்டன் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

தகவல் மூலம் பிபிசி

தமிழில் மதிமுகன்


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE