Wednesday 17th of April 2024 11:34:07 PM GMT

LANGUAGE - TAMIL
(காணொளி)
ஓமந்தை - பாரிய மீட்பு நடவடிக்கையில் மீட்கப்பட்டது முட்டி!

ஓமந்தை - பாரிய மீட்பு நடவடிக்கையில் மீட்கப்பட்டது முட்டி!


வவுனியா மாவட்டம் ஓமந்தை - கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இன்றையதினம் பாரியளவிலான தேடுதல் ஒன்று நடாத்தப்பட்டது.

குறித்த காணியில் சிலமாதங்களுக்கு முன்னர் இனம் தெரியாத நபர்களால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது. பின்னர் காணியின் உரிமையாளரின் உறவினருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய நபர் ஒருவர் அக்காணியில் மர்மபொருள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் நிமித்தம் காணி உரிமையாளரால் இவ்விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார், நீதிமன்ற அனுமதியுடன் இன்றையதினம் காணியில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் குழி தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது 16அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் குங்குமம் வைக்கப்பட்ட சிறிய முட்டி ஒன்றினுள் தகடு ஒன்றை தவிர வேறு எதுவும் கிடைக்காத நிலையில் தோண்டப்பட்ட குழி பின்னர் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த காணியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், நீதவான், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர், வைத்தியர்கள் கிராமசேவையாளர், முன்னிலையில் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE