;

Monday 25th of May 2020 09:22:24 PM GMT

LANGUAGE - TAMIL
மெல்கம் கர்தினால் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குழப்ப முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குழப்ப முயற்சி!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை குழப்புவதற்கு ஒரு சிலர் முனைவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அமரபுற பீடத்தின் தலைவர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக நேற்று (மே-22) கொழும்பு பேராயர் அங்கு சென்றிருந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனினும் சிலர் இதனை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதிகார ஸ்தானத்தில் இருந்து கொண்டு இவ்வாறு செயற்படுபவர்கள் அவர்களுக்கு எவ்வாறு வாழ்வதற்கான உரிமை இருக்கிறதோ அதே போன்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை இருந்தது.

ஆகால் அதனைப் பறித்து தற்போது மனித உரிமை மீறல் பற்றி அவ்வாறானவர்கள் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முற்படும் அதிகாரிகளை பழிவாங்க முற்படக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE