;

Friday 29th of May 2020 08:26:48 AM GMT

LANGUAGE - TAMIL
உயிரிழப்பு!
கைவேலி மருதமடு குளத்தில் மூழ்கி பல்கலைக்கழக புதுமுக மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

கைவேலி மருதமடு குளத்தில் மூழ்கி பல்கலைக்கழக புதுமுக மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!


யாழ். பல்கலைக் கழக புதுமுக மாணவன் நண்பர்களுடன் மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கைவேலி மருதமடு குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது இன்று (மே-23) பல்கலைக் கழக புதுமுக மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் இம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவனும் யாழ். பல்கலைக் கழக புதுமுக மாணவனுமாகிய கைவேலியைச் சேர்ந்த வளர்சிகன் இன்று நண்பர்களுடன் மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில், க.பொ.த.உயர்தரம் வர்த்தக பிரிவில் 3வது இடத்தை பெற்று பெற்றிருந்த வளர்சிகன் யாழ். பல்கலைக் கழகத்திற்கு தேர்வாகியிருந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE