Friday 29th of March 2024 03:10:03 AM GMT

LANGUAGE - TAMIL
அஜித் ரோஹன
ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது நிகழ்வுகளுக்கு தடை!

ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது நிகழ்வுகளுக்கு தடை!


ஊரடங்கு உத்தரவு மற்றும் பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன, ஆனால் பொது நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்துவதற்கான தடை தொடர்வதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கூட்டங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டாலும் இதுபோன்ற எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அஜித் ரோஹன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மாளிகாவத்தையில் அண்மையில் நடந்த சம்பவம் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

மே 26 செவ்வாய்க்கிழமை தொடக்கம் கொழும்பு மற்றும் கம்பாஹா தவிர்ந்த அனைத்து மாவட்டங்களுக்கும் இடையே பயணிக்க அனுமதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE