Saturday 20th of April 2024 04:23:51 AM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலியாவில் இரு மாதங்களின் பின்னா்  பாடசாலைகள் மீளத் திறப்பு!

அவுஸ்திரேலியாவில் இரு மாதங்களின் பின்னா் பாடசாலைகள் மீளத் திறப்பு!


கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளா்த்தும் திட்டங்களை அவுஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள நிலையில் நாட்டில் பல மாகாணங்களில் பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு மாணவா்கள் வகுப்பறைகளுக்குத் திரும்பினா்.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து முழுவதும் உள்ள அரச பாடசாலைகள் இரண்டு மாத தொலைக்கல்வி நடவடிக்கைக்களுக்குப் பின்னா் இன்று மாணவா்களை வரவேற்றன.

விக்டோரியா, டாஸ்மேனியா மற்றும் அவுஸ்திரேலிய தலைநகர மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களும் இந்த வாரம் பாடசாலைகளுக்குத் திரும்பினா்.

தெற்கு அவுஸ்திரேலியா, மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் வடக்கு பிராந்தியத்திலும் மாணவா்கள் பாடசாலைகளில் மீண்டும் தங்கள் சகாக்களுடன் இணைந்து கொண்டனா்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிட்னி போக்குவரத்து வலையமைப்பு முழுவதும் நூற்றுக்கணக்கான கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனா்.

இதேவேளை,கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி சிட்னி பேருந்துகளில் 12 பேரும், ரயில் பெட்டிகளில் 35 பேரும், ஒரு போக்குவரத்து படகில் 45 பேரும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இன்று திங்களன்று பெரும்பாலான பெற்றோா்கள் தாங்களே மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துச் சென்றதன் மூலம் பொதுப் போக்குவரத்தின் மீதான அழுத்தத்தைத் குறைத்தற்காக பெற்றோருக்கு நியூசவுத்வேல்ஸ் முதல்வா் கிளாடிஸ் பெரெஜிக்லியன் நன்றி தெரிவித்தார்.

பாதுகாப்பாக மீண்டும் பாடசாலைகளைத் திறக்க ஏதுவான வளங்களும் ஆதரவும் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தாா்.

பாடசாலைக்கு வரும் அனைவரதும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நாங்கள் சில இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என குயின்ஸ்லாந்து முதல்வா் அனாஸ்டாசியா பாலாஸ்ஸ்குக் தெரிவித்தார்.

கடுமையான சுகாதார நடைமுறைகள் மற்றும் வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அடிக்கடி தொற்று நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவா் கூறினாா்.

ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பும்போது அவர்களின் நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான அனைத்துவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையில், நியூசவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா அரசாங்கங்கள் மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளன.

அழகு நிலையங்கள் உள்ளட்டவற்றை ஜூன் 1 முதல் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணி மீண்டும் திறக்கலாம் என நியூசவுத்வேல்ஸ் சுகாதார அமைச்சர் பிராட் ஹஸார்ட் உறுதிப்படுத்தினார்.

விக்டோரியாவிலும் ஜூன் -1 முதல் தனியார் குடியிருப்புகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் 20 பேர் வரை ஒன்றுகூட அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE