Wednesday 24th of April 2024 12:46:48 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஊரடங்கு தளர்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்!

ஊரடங்கு தளர்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்!


நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை தளர்த்தப்படவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப்பிரிவு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளை, 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளை மேற்கொள்ளும் போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

நோய்த் தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுதல் இவற்றில் அடங்கும்.

அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர் எண்ணிக்கை மற்றும் யாரை சேவைக்கு அழைப்பது என்பதை அந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும் அதிகாரம் குறித்த நிறுவனங்களில் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நாளாந்த பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.

மொஹான் சமரநாயக்க பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE