;

Sunday 27th of September 2020 10:02:54 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: இன்றும் 805 பேருக்கு தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: இன்றும் 805 பேருக்கு தொற்று உறுதி!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று பதிய உச்சம் தொட்டு புதிதாக 805 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மட்டும் 549 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்று இனம்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 11 ஆயிரத்து 131 ஆக உயர்வடைந்துள்ளது.

இதையடுத்து மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 17 ஆயிரத்து 82 பேராக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சையின் பின்னர் 8 ஆயிரத்து 731 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 8 ஆயிரத்து 230 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. இதில் 84 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE