Friday 29th of March 2024 09:30:23 AM GMT

LANGUAGE - TAMIL
கேரளாவில்
திருமணமாகி 2 வருடங்களில் விசப்பாம்பை வைத்து மனைவியை கொலைசெய்த கொடூரம்: கணவர் கைது!

திருமணமாகி 2 வருடங்களில் விசப்பாம்பை வைத்து மனைவியை கொலைசெய்த கொடூரம்: கணவர் கைது!


திருமணமாகி இரண்டு வருடங்களே ஆன நிலையில் கட்டிய மனைவியை விசப்பாம்மை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த குற்றத்திற்காக கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரிய வருவதாவது,

இந்தியா, கேரள மாநிலம் அடூரை சேர்ந்த, தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த சூரஜ்(வயது 27) இற்கும் உத்ரா(வயது 22) விற்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது உத்ராவின் பெற்றோர் 98 பவுன் (784 கிராம்) தங்க நகைகள் மற்றும் ஒரு காரை வரதட்சணையாக வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் சூரஜ் 2-வது திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

முதல் கொலை முயற்சி!

மார்ச் 2 ம் தேதி, அடூரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு வெளியே உத்ராவை ஒரு பாம்பு கடித்தது. உடனடியாக அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர் உயிருக்கு பல நாட்கள் போராடினார். ஏப்ரல் 22 அன்று தான் உத்ரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவள் பெற்றோருடன் கொல்லம் மாவட்டம் அஞ்சலில் உள்ள வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்து வந்தார்.

இரண்டாவது கொலை முயற்சி!

இந்த நிலையில் மே 7-ந்தேதி காலை, உத்ரா தனது பெற்றோர் வீட்டில் படுக்கையறையில் பிணமாக கிடந்து உள்ளார். உத்ராவின் தந்தை விஜயசேனன் தாய் மணிமேகலா, தங்கள் மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் உத்ரா விஷ பாம்புகடித்து இறந்து விட்டதாக கூறி உள்ளனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, படுக்கையறையில் ஒரு அலமாரியின் கீழ் விஷபாம்பை கண்டனர். பாம்பு கொல்லப்பட்டு அவர்களது வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டது.

மே 7 ம் தேதி மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக உத்ராவின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் உத்ராவின் கணவர் சூரஜை கைது செய்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத்தொடங்கியது.

ரூ.10 ஆயிரத்திற்கு விசப்பாம்பு!

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார். மனைவியை கொலை செய்ய கூகுளில் பாம்புகளை தேடி உள்ளார். பின்னர் பாம்பு பிடிப்பவரான காளுவதிகல் சுரேசை தொடர்பு கொண்டு உள்ளார். தனது தொலைபேசியில் பாம்பு பிடிப்பவர்களின் யூடியூப் வீடியோக்களை தான் பார்த்ததாக சூரஜ் ஒப்புக்கொண்டு உள்ளார்.

எவ்வாறாயினும், பாம்பு கடியின் முதல் முயற்சி தோல்வியுற்று உள்ளது. அதில் உத்ரா குணமாகி வந்தார். இதை தொடர்ந்து ​​சூரஜ் மற்றொரு விஷ பாம்பை ரூ .10,000 க்கு வாங்கி உத்ராவின் வீட்டிற்கு கொண்டு சென்று உள்ளார்.

இரவு மனைவி தூங்கும் போது, ​​சூரஜ் தான் வைத்திருந்த ஜாடியில் இருந்து நாகத்தை வெளியே எடுத்து மனைவி மீது வீசி உள்ளார். பாம்பு உத்ராவை இரண்டு முறை கடித்து உள்ளது. இதில் உத்ரா மரணமடைந்து உள்ளார். அதிகாலையில் உத்ராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் சூரஜ் எதுவும் நடக்கவில்லை என்பது போல தனது அறையை விட்டு வெளியே வந்து உள்ளார்.

உத்ராவைக் கொல்ல சூரஜ் பாம்புகளுடன் இரண்டு முயற்சிகளுக்கு மேல் செய்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சூரஜ் தனது தந்தையை இரண்டு முறை அணுகியதாக பாம்பு பிடிப்பவர் சுரேஷின் மகன் சனல் கூறி உள்ளார். அவர் கூறியதாவது,

எலி தொல்லை இருப்பதாக சூரஜ் என் தந்தையிடம் கூறினார். முதலில் அவரிடமிருந்து ஒரு பாம்பை வாங்கிசென்றார். ஆனால் அவர் அந்த பாம்பைத் திருப்பித் தரவில்லை. ஒரு மாதம் கழித்து அவர் ஒரு விஷ பாம்பு கேட்டார். செய்தி பேப்பரில் உத்ராவின் மரணம் குறித்து நான் படித்தபோது, ​​என் அப்பாவிடம் சென்று எல்லாவற்றையும் போலீசாரிடம் சொல்லும்படி கூறினேன், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இப்போது காவல்துறை அவரை கைது செய்து உள்ளது என கூறினார்.

உத்ராவின் தந்தை விஜயசேனன் கூறும் போது,

எவ்வாறாயினும், வீட்டைச் சுற்றி பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்டதாக உத்ரா கூறினார். இது எனக்கு சந்தேகங்களைத் தூண்டியது. மேலும், இரவு 8.30 மணியளவில் அவரை பாம்பு கடித்தது, ஆனால் அதிகாலை 3 மணியளவில் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அது ஏன்? மேலும், சூரஜ் அதிக பணம் விரும்புவதை நான் அறிவேன், என்று கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, கேரளா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE