Tuesday 23rd of April 2024 11:09:09 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கையில்
மேலும் 20 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பித்தனர்: மொத்த குணமடைவு 732 ஆக உயர்வு!

மேலும் 20 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பித்தனர்: மொத்த குணமடைவு 732 ஆக உயர்வு!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் மேலும் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்த குணமடைந்தவர்களது எண்ணிக்கை 732 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சு இன்று (மே-27) மு.பகல் 10.00 மணிவரையான நிலவரங்களின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று (மே-26) புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த 137 பேரில் 127 பேர் குவைத்தில் இருந்து திரும்பியவர்களாவர். இதுவரை இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 288 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இனம் காணப்பட்டுள்ளது.

மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை -1,319!

நேற்று (மே-26) பின் இரவு 11.30 மணி நிலவரத்தின் அடிப்படையில் இலங்கை தொற்று நோயியல் பிரிவு வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதியாக 137 பேர் இனம் காணப்பட்டதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 1,319 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை - 577!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 1,319 பேரில் தற்போது 577 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை - 732!

கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளராக இனம் காணப்பட்டிருந்த சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவலை 732 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் - 76!

கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்களது எண்ணிக்கை 76 ஆக உள்ளது.

மொத்த உயிரிழப்பு!

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மங்கிபிரிட்ஜ் இராணுவ முகாமில், கடந்த 21ம் திகதி குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களில் 52 வயதான பெண் ஒருவர் நேற்று (மே-25) அதிகாலை உயிரிழந்துள்ளார். இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான கடற்படையினரது எண்ணிக்கை 638!

நேற்று புதிதாக 10 கடற்படையினருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்று ஏற்பட்ட இலங்கை கடற்பட்டையினரது எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் இதுவரை 344 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இந்நிலையில் மேலும் 294 கடற்படையினர் சிகிச்சையில் உள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE