Friday 19th of April 2024 11:07:58 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கை கடற்படை தெரிவிப்பு!
அம்பன் சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்ட இலங்கை மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவர நடவடிக்கை!

அம்பன் சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்ட இலங்கை மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவர நடவடிக்கை!


அண்மையில் ஏற்பட்ட அம்பன் சூறாவளியால் படகுகளுடன் அடித்துச் செல்லப்பட்ட இலங்கை மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இது குறிது இலங்கை கடற்படை தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அம்பன் புயல் குறித்து, வானிலை ஆய்வுத் துறை, மீன்வள மற்றும் நீர்வளத் துறை மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை இது குறித்து மீன்பிடி சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், அந்த நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட இலங்கை பல நாள் மீன்பிடிப் படகுகள் சர்வதேச கடல் எல்லையில் சுமார் 400 மற்றும் 500 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்கச் சென்றிருந்தது. மேலும் இந்த படகுகளில் சில படகுகள் சூறாவளியின் தாக்கத்தால் இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டன.

இதற்கிடையில், இலங்கை கடற்படையின் கீழ் செயல்படும் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Maritime Rescue Coordination Center – MRCC) இந்தோனேசிய கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு வளரும் நிலைமை குறித்து அறிவித்தது, இதன் விளைவாக பாதிக்கப்பட்ட படகுகள் இந்தோனேசியா கடல் பகுதியில் தங்க அனுமதிக்கப்பட்டன.

குறித்த படகுகளின் 36 படகுகளுக்கு மீண்டும் இலங்கையை நோக்கி வர தேவையான எரிபொருள், உணவு மற்றும் நீர் எதுவும் இல்லை என்றும், பல படகுகளின் இயந்திரக் குறைபாடுகள் பதிவாகியுள்ளதாகவும் மீன்வள மற்றும் நீர்வளத் துறை கடற்படைக்குத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பல நாள் மீன்பிடிக் படகுகளுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படை 2020 மே 21 அன்று இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சமுதுர குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து படகுகளுடனும் தகவல் தொடர்புகளை ஏற்படுத்திய பின்னர் அனைத்து படகுகளுக்கும் இலங்கையை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியது.

இந்நிலையில், 2020 மே 23 அன்று இலங்கை கடற்கரையிலிருந்து சுமார் 550 கடல் மைல் தொலைவில் சூறாவளியின் தாக்கத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஏனைய மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்படை கப்பல் சமுதுர முதன்முதலில் கண்டறிந்தது.

அடுத்த இரண்டு நாட்களில், கடற்படைக் கப்பல் தொடர்ந்து இந்த படகுகளுக்கு உணவு, நீர், எரிபொருள், மருத்துவ உதவி மற்றும் பழுதுபார்ப்பு உதவிகளை வழங்கியது.

பாதிக்கப்பட்ட இந்த பல நாள் மீன்பிடித் தொழிலாளர்கள் 2020 ஏப்ரல் 18 முதல் மே 05 வரை குடாவெல்ல, அம்பலங்கொடை மற்றும் காலி மீன்வளத் துறைமுகங்களில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை, இந்த படகுகளையும் இந்த படகுகளின் அனைத்து மீனவர்களையும் பாதுகாப்பாக அருகிலுள்ள கடற்கரைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE