Saturday 20th of April 2024 07:34:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
உணவகங்கள், பாா்கள், பூங்காக்களை  ஜூன் - 2 முதல் திறக்கிறது பிரான்ஸ்!

உணவகங்கள், பாா்கள், பூங்காக்களை ஜூன் - 2 முதல் திறக்கிறது பிரான்ஸ்!


பிரான்ஸில் மதுபானசாலைகள், உணவகங்கள் மற்றும் பூங்காக்கள் ஜூன் 2-ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளாா்.

அத்துடன் 100 கிலோ மீற்றா் தூரங்களுக்குள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அவா் கூறியுள்ளாா்.

தலைநகர் பாரிஸில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து மற்ற நிலப்பரப்பை விட அதிகமாக உள்ளது, இந்நிலையில் அங்கு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் தொடா்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.

கடுமையான கொரோனா வைரஸ் முடக்கல்களை படிப்படியாக தளா்த்தும் நடவடிக்கைகளை பிரான்ஸ் படிப்படியாக அறிவித்து வருகிறது. இந்நிலையிலேயே இரண்டாம் கட்ட தளா்வுகள் ஜூன் - 2 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இதேவேளை, அடுத்த கட்ட தளா்வுகள் குறித்து அமைச்சரவை கூடி ஆராயும். அமைச்சரவை அனுமதியுடன் அடுத்த கட்டமாகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் பிரெஞ் பிரதமர் கூறினாா்.

நாட்டில் உள்ள உல்லாச விடுதிகள் ஜூன் 22 முதல் மீண்டும் திறக்கப்படும். அடுத்த வாரம் முதல் பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் திறக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

எனினும் தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் வெளியே வரும்போது முக கவசங்களை அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் காட்டாயமாக்கப்படும் எனவும் பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

இதுவரை 28,500 க்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்த தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பலா் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா். வைரஸ் தொற்று நோய் இன்னமும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனால் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டாலும் மக்கள் மிகுந்த எச்சரி்க்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளாா்.

பிரான்ஸில் பொது இடங்களில் 10 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்கான தடை தொடா்ந்தும் பிரான்ஸில் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE