Monday 30th of November 2020 07:03:52 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 30.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 30.05.2020


இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 17ம் திகதி, ஷவ்வால் 6ம் திகதி, 30.5.2020 சனிக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மாலை 5:12 வரை, அதன்பின் நவமி திதி, பூரம் நட்சத்திரம் நள்ளிரவு 2:15 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த - மரண யோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. சூலம் : கிழக்கு

• பரிகாரம் : தயிர் • சந்திராஷ்டமம் : திருவோணம் • பொது: பெருமாள், அனுமன், பைரவர் வழிபாடு, கரிநாள்.

மேஷம்

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பழைய இனிய சம்பவங் கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்க ளால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்கு தாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நன்மை நடக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்திசெய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். துணிச்சலுடன் செயல் படும் நாள்.

கடகம்

கடகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். பழைய பிரச்சி னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தி யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். குடும்பத்தாருடன் இணக் கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனசு புண்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: கணவன்- மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப் பீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதையும் தாங்கும் வலிமையும் மனோபலமும் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழைபொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்பு கூடும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப் பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். சகோ தரர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் . உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண் டாகும் நாள்.

மீனம்

மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்பு டன் பேசுவார்கள். விஐபிகள் அறி முகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE